தமிழ்நாடு

தமிழகத்தில் விண்ணப்பித்த உடனே இ-பாஸ் கிடைக்கும் நடைமுறை தொடங்கியது

தமிழகத்தில் விண்ணப்பித்த உடனே இ-பாஸ் கிடைக்கும் நடைமுறை தொடங்கியது

webteam

தமிழகத்தில் விண்ணப்பித்த உடனே இபாஸ் கிடைக்கும் நடைமுறை இன்று முதல் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இபாஸ் கட்டாயம் என்பது நடைமுறையில் இருந்து வருகிறது. இதனால் கடந்த நான்கு மாதங்களாக மக்கள் மிகவும் சிரமப்படுவதாகவும் உண்மையான காரணங்களை கூறினாலும் இபாஸ் மறுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இபாஸ் பெறும் முறையில் முறைகேடுகள் நிகழ்வதாகவும் புகார் எழுந்தது.

இதையடுத்து விண்ணப்பித்த அனைவருக்கும் இபாஸ் கிடைக்கும் முறை இன்று முதல் தொடங்கும் என முதல்வர் ஏற்கெனவே அறிவித்தார். அதன்படி இன்று முதல் விண்ணப்பித்த உடனே இபாஸ் கிடைக்கும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது. மேலும், தவறான காரணங்களை கூறி விண்ணப்பித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.