உலக ரோபோட்டிக்ஸ் ஒலிம்பியாட் போட்டி புதிய தலைமுறை
தமிழ்நாடு

உலக ரோபோட்டிக்ஸ் ஒலிம்பியாட் போட்டி: தேசிய சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற SRM பப்ளிக் பள்ளி!

உலக ரோபோட்டிக்ஸ் ஒலிம்பியாட் போட்டியில், எஸ்.ஆர்.எம் பப்ளிக் பள்ளி சாதனை செய்துள்ளது.

webteam

உலக ரோபோட்டிக்ஸ் ஒலிம்பியாட் போட்டியில் இளம் கண்டுபிடிப்பாளர்கள் பிரிவில் எஸ்.ஆர்.எம் பப்ளிக் பள்ளி ஜூனியர் தேசிய சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது.

'தி ஃபியூச்சர் இன்னோவேட்டர்ஸ்' என்ற தலைப்பில் நடைபெற்ற போட்டியில் 206 அணிகள் பங்கேற்றன. இதில், காற்றாலை ஆற்றலை பயன்படுத்துவது மற்றும் தானியங்கி கப்பல் வழிகாட்டியை உருவாக்க உதவும் தொழில்நுட்பம் குறித்த எஸ்ஆர்எம் பப்ளிக் பள்ளி மாணவர்களின் கண்டுபிடிப்பு முதலிடத்தை பிடித்துள்ளது.

ஜானவர்ஷன், சரண்ஷ் சிங்கானியா

எஸ்.ஆர்.எம் பப்ளிக் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் ஜானவர்ஷன் மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவர் சரண்ஷ் சிங்கானியா ஆகிய இருவரும் ஜூனியர் இன்னோவேட்டர்ஸ் பிரிவில் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், உலக ரோபோட்டிக்ஸ் ஒலிம்பியாட் இறுதிப் போட்டி, நவம்பர் மாதம் பனாமா நகரில் நடைபெற இருக்கிறது. இதில், எஸ்ஆர்எம் பப்ளிக் பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.