தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூர்: வன்னியருக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: வன்னியருக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

kaleelrahman

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வன்னியருக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதை கண்டித்து அனைத்து மறவர் நல கூட்டமைப்பின் சார்பில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் வன்னியருக்கு உள் ஒதுக்கீடு வழங்கியதை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பிலுள்ள வன்னியருக்கு தனியாக 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி உத்தரவு பிறப்பித்தார். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த சமுதாயத்தினர் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் மேலவீதி தேவர் சிலை முன்பு திரண்ட அனைத்து மறவர் கூட்டமைப்பினர் டிஎன்டி விற்கு தனி உள்ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தியும் ஏற்கனவே வன்னியருக்கு வழங்கிய இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வலியுறுத்தியும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்காததால் போராடிய 50க்கும் மேற்பட்டோரை நகர் காவல் துறையினர் கைது செய்தனர்.