தமிழ்நாடு

சமூக ஆர்வலர் புகைப்படத்தை தவறாக வெளியிட்டதா இலங்கை அரசு?

சமூக ஆர்வலர் புகைப்படத்தை தவறாக வெளியிட்டதா இலங்கை அரசு?

webteam

அமெரிக்க இஸ்லாமிய ஆர்வலராக செயல்படும் ஒருவரின் புகைப்படத்தை இலங்கை அரசு வெளியிட்டிருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொடர் குண்டுவெடிப்புகளில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 9 பேரின் புகைப்படங்களையும், அவர்களது பெயர்களையும் பொதுமக்களின் பார்வைக்கு அந்நாட்டு காவல்துறை வெளியிட்டுள்ளது. இதில், மூன்று பெண்களும் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் பற்றிய விவரங்கள் தெரிந்தால், காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வசதியாக மூன்று தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. 

இலங்கையில் கடந்த ஞாயிறன்று தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் சிக்கி 359 பேர் பலியாகியினர். ஐநூறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதற்கிடையே, குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்று இலங்கை ராணுவ பாதுகாப்புத்துறை செயலர் ஹேமசிறி பெர்னாண்டே ராஜினாமா செய்துள்ளார். அவரைப் பதவி விலகுமாறு அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேன நேற்று அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இலங்கை அரசு வெளியிட்ட புகைப்படங்களிலுள்ள ஒன்பது பேரில் ஒருவரான அமரா மஜீத் என்பவரது புகைப்படம் தவறுதலாக இடம்பெற்றுள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இளம் பெண்ணான அமரா என்பவர் அமெரிக்க இஸ்லாமிய ஆர்வலர் எனவும், அவர் தி ஃபாரினர்ஸ் என்ற புத்தகத்தின் ஆசிரியர் என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

இவர் தொடர்பாக அமெரிக்காவின் சில பத்திரிகைகள் மற்றும் நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளது. இவர் அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு எழுதிய கடிதம் ஒன்றை வார இதழ் ஒன்று வெளியிட்டுள்ளது. இந்த அளவிற்கு சமூக ஆர்வலராக உள்ள இவரது புகைப்படத்தை இலங்கை அரசு வெளியிடுகிறது என்றால் அது பொய்யா ? இல்லை, அவர்கள் விக்கிப்பிடியா-வை கூட பார்க்கவில்லைய ? சமூக வலைத்தளங்களில் பலர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.