இலங்கை கடற்படை பறிமுதல் செய்த பல கோடி ரூபாய் மதிப்பிலான 94 தமிழக விசைப்படகுகளை அழிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2015 முதல் 2018ஆம் ஆண்டு வரை தமிழக மீனவர்களின் 121 விசைப்படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. இந்த படகுகள் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டிருப்பதால் கடற்கரையில் மாசு ஏற்பட்டுள்ளதாக இலங்கையில் புகார் எழுந்துள்ளது. மேலும், கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ள தமிழக படகுகளால் தங்கள் தொழில் பாதிக்கப்படுவதாக இலங்கை மீனவர்களும் கூறி வந்தனர்.
இது தொடர்பான வழக்கு இலங்கை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், 94 படகுகளை அழிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதில் 88 படகுகள் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு சொந்தமானது. இந்த உத்தரவால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். படகுகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.