தமிழ்நாடு

சட்டப்பேரவை சிறப்புக் கூட்டங்களும்... காரணங்களும்..

சட்டப்பேரவை சிறப்புக் கூட்டங்களும்... காரணங்களும்..

webteam

சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் இதற்கு முன் எதற்கெல்லாம் கூட்டப்பட்டது என்று பார்க்கலாம்.

மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை கர்நாடகா தொடங்கியதை அடுத்து, கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்போதைய முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டினார். இதைத்தொடர்ந்து 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் மேகதாது பிரச்னைக்காக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டு இரு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

ராஜீவ் காந்தி கொலையில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி ‌2016மே மாதம் பேரவை‌யில் தீர்மானம் ‌நிறைவேற்றப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான தடைகளை நீக்கக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்தபோது, 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டது. பின்னர் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதே ஆண்டு நீட் தேர்வுக்காக மீண்டும் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.