தமிழ்நாடு

மகாராஷ்டிர முதலமைச்சராக உத்தவ் தாக்கரே தேர்வு - கூட்டணி கட்சிகள் ஒருமனதாக தீர்மானம்

மகாராஷ்டிர முதலமைச்சராக உத்தவ் தாக்கரே தேர்வு - கூட்டணி கட்சிகள் ஒருமனதாக தீர்மானம்

webteam

மகாராஷ்டிர மாநிலத்தின் முதலமைச்சராக சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே கூட்டணி கட்சிகள் சார்பில் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைவதில் இழுபறி நீடித்தது. சிவசேனா மற்றும் பாஜக இடையில் போட்டி நிலவியது. சிவசேனாவிற்கு தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆதரவளித்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி சட்டமன்றக்குழுத் தலைவர் அஜித் பவார் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்தது.

இதையடுத்து உச்சநீதிமன்றத்திற்கு வழக்குகள் சென்று, நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து மகாராஷ்ராவின் துணை முதலமைச்சராக இருந்த அஜித் பவார் மற்றும் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆகிய மூன்று கட்களின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கூட்டணியின் தலைவராக உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் அவர் முதலமைச்சராக பதவியேற்பார் எனத் தெரிகிறது. உத்தவ் தாக்கரே கூட்டணியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து அவர், ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளார்.

கூட்டணி சார்பில் ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.