தமிழ்நாடு

சட்டை பட்டன் போடச் சொன்னதால் ஆத்திரம்: மாணவர்களிடையே மோதல், போலீஸ் குவிப்பு

சட்டை பட்டன் போடச் சொன்னதால் ஆத்திரம்: மாணவர்களிடையே மோதல், போலீஸ் குவிப்பு

webteam

கோவை அரசு கலைக்கல்லூரியில் இரண்டு பிரிவு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பதற்றம் நிலவுகிறது. இதனையடுத்து கல்லூரிக்கு 3 நாட்களும், விடுதிக்கு ஒரு வாரமும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவன் லோகேஷ், சட்டை பட்டன் போடாமல் இருந்தது குறித்து, மூன்றாம் ஆண்டு படிக்கும் மஞ்சுநாதன் எனும் மாணவர் கேட்டுள்ளார். இதனால் லோகேஷ், மஞ்சுநாதனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மஞ்சுநாதன், லோகேஷை தாக்க ஆட்களை கூட்டிவந்துள்ளார். அதே போல் லோகேஷ் விடுதியில் இருந்து மாணவர்களை அழைத்து வந்ததாக தெரிகிறது. பின்னர் இருபிரிவினரும் கட்டையால் தாக்கிக்கொண்டதில் கல்லூரியில் பதற்றம் நிலவியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவர்களை சமாதானம் செய்தனர். மேலும் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் கல்லூரியில் ஈடுபட்டுள்ளனர். தாக்குதல் தொடர்பாக 4 மாணவர்கள் கல்லூரியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.