சென்னை ஷெனாய் நகர் திருவிக காலனியில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்ததற்கு மெட்ரோ ரயில் ஓட்டம்தான் காரணம் என வீட்டு உரிமையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
திருமங்கலம்- நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் சேவை சமீபத்தில் தொடங்கியது. இந்த சுரங்கப்பாதையில் செனாய்நகர், திரு.வி.க. பூங்கா, கீழ்ப்பாக்கம், அண்ணாநகர் உள்ளிட்ட ரெயில் நிலையங்கள் உள்ளன. சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில்கள் செல்லும்போது திரு.வி.க. நகர் குடியிருப்பு பகுதிகளில் அதிர்வு ஏற்படுவதாக பொதுமக்கள் இடையே பீதி பரவியது. சில வீடுகளில் விரிசல் ஏற்பட்டது.
திருவிக நகரில் உள்ள 28 வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதற்கு மெட்ரோ ரயில் ஓட்டமே காரணம் என உரிமையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஆனால், வீடுகளில் விரிசல் ஏற்பட்டதற்கு மெட்ரோ ரயில் ஓடுவதற்கும் தொடர்பில்லை எனவும் இதுதொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அறிக்கை வெளியிடப்படும் என மெட்ரோ தரப்பில் கூறப்பட்டுள்ளது.