தமிழ்நாடு

உச்சநீதிமன்ற தீர்ப்பு: தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

உச்சநீதிமன்ற தீர்ப்பு: தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

webteam

பரபரப்பான அரசியல் சூழலில் சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று காலை 10,30 மணிக்கு தீர்ப்பு வரவுள்ளநிலையில், தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை மாநகர் முழுவதும் 10,000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் அசாம்பாவித சம்பவங்கள் ஏற்படாவண்ணம் காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னைக்குள் வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. அந்த அந்த மாவட்டங்களில் உள்ள முக்கிய தலைவர்கள் இல்லங்களுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் ஆளுநர் மாளிகை, முதலமைச்சர் பன்னீர்செல்வம் இல்லம், கோபாலபுரம், போயஸ்தோட்டம் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் வீடுகளுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தங்கியுள்ள கூவத்தூர் விடுதியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.