ஸ்கூட்டர், பைக், கார் உள்ளிட்ட வாகனங்களுக்கான காப்பீட்டு தொகை வரும் 16ம் தேதி முதல் உயரவுள்ளது.
இது குறித்த விரிவான அறிக்கையை இந்திய காப்பீட்டு நிறுவனங்களின் சங்கமான ஐ.ஆர்.டீ.ஏ வெளியிட்டுள்ளது. அதன்படி 75 முதல் 150 சிசி திறனுள்ள இரு சக்கர வாகனங்களுக்கு 3ஆம் தரப்பு காப்பீட்டு கட்டணம் 720 ரூபாயில் இருந்து 752 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது. 150 சிசி முதல் 350 சிசி வரையிலான வாகனங்களுக்கு கட்டணம் 985 ரூபாயில் இருந்து ஆயிரத்து 193 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆயிரம் சிசி திறனுக்கு கீழ் உள் கார்களுக்கு இதுவரை ஆயிரத்து 850 ரூபாய் காப்பீட்டு கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் இனி அது 2 ஆயிரத்து 72 ரூபாய் ஆக அதிகரிக்கப்பட உள்ளது. ஆயிரம் முதல் ஆயிரத்து 500 சிசி திறனுள்ள கார்களுக்கான காப்பீட்டு கட்டணம் 2 ஆயிரத்து 863 ரூபாயில் இருந்து 3ஆயிரத்து 221 ரூபாய் ஆக அதிகரிக்கிறது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1ம் தேதி 3ஆம் தரப்பு காப்பீட்டு கட்டணம் உயர்த்தப்படும் நிலையில் இம்முறை ஜூன் 16ம் தேதி முதல் அது அதிகரிக்கப்பட உள்ளது.