தமிழ்நாடு

பாலகிருஷ்ண ரெட்டி சரணடைய விலக்கு

பாலகிருஷ்ண ரெட்டி சரணடைய விலக்கு

Rasus

தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு சரணடைவதில் இருந்து உச்சநீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது.

கடந்த 1998-ஆம் ஆண்டு பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கில், பாலகிருஷ்ண ரெட்டியை குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் அறிவித்து 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அவர் சரணடைய பிப்ரவரி 7-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதனால் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை இழந்த பாலகிருஷ்ண ரெட்டி, சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்துச் செய்யக் கோரி
உயர்நீதிமன்றத்தை நாடினார். ஆனால் உயர்நீதிமன்றம் பாலகிருஷ்ண ரெட்டியின் கோரிக்கையை நிராகரித்தது. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தை நாடினார் பாலகிருஷ்ண ரெட்டி.  இந்நிலையில், வரும் 7-ம் தேதிக்குள் சரணடைய வேண்டும் என்பதில் இருந்து பாலகிருஷ்ண ரெட்டிக்கு விலக்கு அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.