தமிழ்நாடு

அத்திவரதர் திருவிழா: ஊக்கத்தொகை இன்னும் வரவில்லை ! துப்புரவு பணியாளர்கள் மனு

அத்திவரதர் திருவிழா: ஊக்கத்தொகை இன்னும் வரவில்லை ! துப்புரவு பணியாளர்கள் மனு

Rasus

அத்திவரதர் திருவிழாவில் இரவு பகலாக பணியாற்றியதற்காக தமிழக அரசு அறிவித்த ஊக்கத்தொகை இன்னும் வந்து சேரவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் மனு அளித்துள்ளனர்.

காஞ்சிபுரம் பெருநகராட்சியில் 51 வார்டுகளில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாத சம்பளம் 500 ரூபாய் முதல் 9 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. இவர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் தங்களுக்கு கடந்த 3 மாத சம்பளத்தை உடனே வழங்கக் கோரியும், பணி நிரந்தரம் செய்யக்கோரியும் காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் மனு கொடுத்துள்ளனர்.

மேலும் அத்திவரதர் திருவிழாவில் இரவு பகலாக பணியாற்றியதற்காக தமிழக அரசு அறிவித்த ரூ.3000 ஊக்கத்தொகை இன்னமும் வந்துசேரவில்லை எனவும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே நிலுவை தொகை மற்றும் அத்திவரதர் திருவிழாவில் பணியாற்றியதற்கான ஊக்கத்தொகை ஆகியவற்றை உடனடியாக வழங்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.