தமிழ்நாடு

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குரங்குகள் தொல்லை.. நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குரங்குகள் தொல்லை.. நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

kaleelrahman

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குரங்கு ஒன்று தொழிலாளியின் செல்போனை எடுத்துச் சென்றது. சுமார் இரண்டு மணி நேரம் போராடி குரங்கிடமிருந்து செல்போன் மீட்கப்பட்டது.

வனப்பகுதியில் இருந்து உணவு தேடி நகருக்குள் புகுந்த சில குரங்குகள் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் தஞ்சமடைந்துள்ளன. அதில் ஒரு குரங்கு மேல்தளத்தில் ஜன்னலருகே வைக்கப்பட்டிருந்த செல்போனை எடுத்துக்கொண்டு ஓடியது.

இதனைக் கண்ட செல்போன் உரிமையாளர் விக்னேஷ் என்பவர் தொழிலாளர்களோடு சேர்ந்து குரங்கிடம் இருந்து செல்போனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு சென்ற அந்த குரங்கு செல்போனை விடாமல் பிடித்தபடி அங்கும் இங்குமாக ஓடியது.


இதனிடையே குரங்கிற்கு பிஸ்கட் மற்றும் வாழைப்பழங்கள் போடப்பட்டது. இதையடுத்து சுமார் 2மணி நேரத்திற்கு பிறகு குரங்கு செல்போனை போட்டுவிட்டுச் சென்றது. இந்த சம்பவத்தையடுத்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முகாமிட்டுள்ள குரங்குகளை வனத்துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.