தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை, வரும் ஜூலை 19 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதில் முக்கியமானதாக தமிழகத்தில் கடைகள் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு நீட்டிப்பில் கூறப்பட்டிருக்கும், முக்கியமான சில சிறப்பம்சங்கள் இங்கே:
- பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவதை கட்டாயம் பின்பற்ற வேண்டும்
- நோய் தொற்று அறிகுறி தென்பட்டவுடன் அருகில் உள்ள மருத்துவமனையை அணுக வேண்டும்
- கொரோனா விதிமுறைகளை மீறுவோர் மீது அபராதம் விதிக்கப்பட்டு, நடவடிக்கை தொடரும்
- திருமண நிகழ்வுக்கான கட்டுப்பாடு தொடர்கிறது
- திருமண நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற கட்டுப்பாடு தொடர்கிறது
- இறுதிச்சடங்கு பங்கேற்பதற்கான கட்டுப்பாடு தொடர்கிறது
- இறுதிச் சடங்கில் 20 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற கட்டுப்பாடு தொடர்கிறது
- உணவகங்கள், தேநீர் கடைகள், பேக்கரி உள்ளிட்ட கடைகள் 50% வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி
- வேலைவாய்ப்பு எழுத்துத்தேர்வுகளுக்கு அனுமதி
- தமிழகத்திலிருந்து புதுச்சேரிக்கு பேருந்து சேவைக்கு அனுமதி.
- அரசியல் கூட்டங்கள், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகளுக்கு தடை தொடருகிறது
- திரையரங்குகள் திறக்கப்படுவதற்கான தடை நீடிக்கப்படுகிறது
- மாநிலங்களுக்கு இடையேயான தனியார், அரசு பேருந்து போக்குவரத்துக்கு தடை தொடரும்
- பள்ளி, கல்லூரிகள் திறக்கத் தடை தொடர்கிறது
- மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான எழுத்துத் தேர்வுகளை, மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று நடத்த அனுமதி தடை நீட்டிப்பு
- மதுபான கூடங்கள் திறப்பதற்கான தடை நீட்டிப்பு
- தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள், உயிரியியல் பூங்காக்கள், நீ்ச்சல் குளங்கள் திறக்க தடை தொடருகிறது