தமிழ்நாடு

வங்கியில் போலி நகைகளை வைத்து ரூ.94 லட்சம் மோசடி - ஏலத்தில் அம்பலம்

வங்கியில் போலி நகைகளை வைத்து ரூ.94 லட்சம் மோசடி - ஏலத்தில் அம்பலம்

webteam

சேலத்தில் உள்ள தொழில் கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை வைத்து 94 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக நகை மதிப்பீட்டாளர் உள்பட 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம் நான்கு சாலை அருகே செயல்பட்டு வரும் தொழில் கூட்டுறவு வங்கியில் கடந்த 22-ஆம் தேதி நகைகள் ஏலம் விடப்பட்டன. அப்போது நகை மதிப்பீட்டாளர் சக்திவேல் மற்றும் நகை அடமானம் வைத்த வாடிக்கையாளர்கள் சிலர் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கிளை மேலாளர் தெய்வமணி, தலைமை அலுவலகத்திற்கு தகவல் அளித்தார்.

வங்கியைச் சார்ந்த குழு, சீலிட்டு வைக்கப்பட்ட நகைகளை ஆய்வு செய்ததில், 24 பேரின் பெயரில் 4 கிலோ போலி நகைகளை வைத்து 94 லட்சம் ரூபாய் மோசடி நடந்தது தெரியவந்தது. இதையடுத்து நகை மதிப்பீட்டாளர் சக்திவேல் உள்பட 25 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தலைமறைவான சக்திவேலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். வாடிக்கையாளர்களுக்கு சக்திவேல் உடந்தையாக இருந்தாரா? வாடிக்கையாளர்கள் பெயரில் சக்திவேல் மோசடி செய்தாரா? என்பன குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.