'Amphan' புயலினால் தமிழகத்திற்கு எந்த ஒரு அபாயமும் இல்லை என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகமெங்கும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தமிழக முதலமைச்சர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
Amphan' புயல் அதி தீவிர புயலாக மாறி தெற்கு வங்காள விரிகுடாவில் நிலைபெற்று, நகர்ந்து வருகிறது. இந்தப்புயல் மேலும் வடக்கு வடகிழக்கு பகுதியில் நகரும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடல் சீற்றம் ஆக இருக்கும் என்றும் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இடி மின்னல் மூலம் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முதலமைச்சரின் அறிவுரைப்படி எடுக்கப்பட்டு வருகிறது. இந்த புயலினால் தமிழகத்திற்கு எந்த ஒரு அபாயமும் இல்லை.” எனத் தெரிவித்தார்.