தமிழ்நாடு

கொங்குநாடு தனி மாநிலமாக உருவாக்க தருமபுரியில் பாஜக கூட்டத்தில் தீர்மானம்

கொங்குநாடு தனி மாநிலமாக உருவாக்க தருமபுரியில் பாஜக கூட்டத்தில் தீர்மானம்

Veeramani

மேற்கு மண்டலமான கொங்கு பகுதியை ஒருங்கிணைத்து கொங்குநாடு தனி மாநிலமாக உருவாக்க தருமபுரியில் பாஜக கூட்டத்தில் தீர்மானம்.

தருமபுரியில் பாஜக மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில செயலாளர் கார்த்திகாயினி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் முதலாவதாக மேற்கு மாவட்டங்களை ஒருங்கிணைத்து கொங்குநாடு தனி மாநிலமாக உருவாக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் கடத்தூர் பகுதிக்கு உட்பட்ட பொதியம்பல்லம் தடுப்பனையினை நீர்தேக்க அணையாக கட்டி கான்கிரீட் கால்வாயாக அமைக்க வேண்டும், ஒகேனக்கல் காவிரி உபரி நீரை நீரேற்று குழாய் மூலம் அனைத்து ஏரிகளுக்கும் தண்ணீர் நிரப்ப வேண்டும், தருமபுரி மாவட்டம் மற்றும் நகரின் அனைத்து பகுதிகளுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் போதிய அளவு வழங்க வேண்டும். மரவள்ளி கிழங்கிற்கு உரிய விலையினை அரசு நிர்ணயம் செய்யவும். மரவள்ளி கிழங்கினை அரசே கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கரும்பு விவசாயிகளிக்கு ஊக்க தொகையுடன் அடிப்படை ஆதார விலை உயர்த்தியும் கடன் வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட 18 தீர்மானங்கள் பாஜக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. பாஜக மாவட்டத் தலைவர் அனந்த கிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.