தமிழ்நாடு

“மறுபடியும் அப்படியே இருக்கிறது”- புதிய அரசாணை குறித்து ஆதங்கப்படும் ட்விட்டர்வாசிகள்..!

“மறுபடியும் அப்படியே இருக்கிறது”- புதிய அரசாணை குறித்து ஆதங்கப்படும் ட்விட்டர்வாசிகள்..!

PT

தமிழகம் முழுவதும் உள்ள ஊர்ப் பெயர்களைத் தமிழில் உள்ளது போலவே ஆங்கிலத்தில் உச்சரிக்கவும், எழுதவும் அரசாணை வெளியிடப்பட்ட நிலையில் அதிலும் ஒருசில தவறுகள் இருப்பதாக ட்விட்டர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

ஊர்ப் பெயர்களைத் தமிழில் உள்ளது போலவே ஆங்கிலத்தில் உச்சரிக்கவும், எழுதுவதற்கான அரசாணையைத் தமிழக அரசு நேற்று வெளியிட்டது. அதில் “தமிழகம் முழுவதிலும் உள்ள ஊர்ப் பெயர்களை தமிழில் உள்ளது போலவே ஆங்கிலத்தில் உச்சரிக்கவும், எழுதவும் வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.இதனை பலரும் வரவேற்றாலும் ட்விட்டர்வாசிகள் சிலர் வெளியிடப்பட்ட பெயர் மாற்றத்தில் தவறு இருப்பதாகவும், அதில் மாற்றம் செய்யவேண்டும் என்றும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். 

அதில் ட்விட்டர் வாசி ஒருவர் கூறும்போது “இங்கே பாருங்கள் கன்னடத்தில் உள்ள அள்ளி என்ற பெயரை தமிழில் (பட்டி) என்று மாற்றம் செய்து பரிந்துரை செய்ததை மீண்டும் கன்னடத்தில் உள்ளதுபோலவே  அள்ளி என எழுதி உள்ளார்கள். இதுதான் இவர்கள் ஊர் பெயர்களை மாற்றிய நடவடிக்கையா ?? என ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார்.  மற்றொரு ட்விட்டர்வாசி கூறும் போது, Tamilnadu என்பதை ஆங்கிலத்தில் Thamizh Naadu என்று மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.