தமிழ்நாடு

விழுப்புரம் கோட்டத்தில் அரசு சொகுசுப் பேருந்துகளின் கட்டணம் குறைப்பு

விழுப்புரம் கோட்டத்தில் அரசு சொகுசுப் பேருந்துகளின் கட்டணம் குறைப்பு

webteam

விழுப்புரம் கோட்டத்தில், குறுகிய தூரங்களுக்கு இயக்கப்படும் அரசுப் சொகுசு விரைவுப் பேருந்துகளின் கட்டணம் திடீரென குறைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு போக்குவரத்து துறைகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக புதிய பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலான பேருந்துகள் சொகுசு பேருந்துகள். இந்த பேருந்துகள் ஒரு சாராரை கவர்ந்தாலும், இந்த பேருந்துகளின் கட்டணம் ஏழை எளிய மக்கள் பயணம் செய்ய பெரும் தடையாக இருந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு முதற்கட்டமாக விழுப்புரம் கோட்டத்தில் இயங்கி வரும் அரசு சொகுசு பேருந்தகளின் கட்டணத்தை குறைத்துள்ளது.

அந்த வகையில் 2+2 இருக்கைகள் கொண்ட சொகுசு பேருந்தில் குறைந்தபட்ச கட்டணம் 25 இல் இருந்து ரூபாய் 15 ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. 2+3 இருக்கைகள் கொண்ட சொகுசு பேருந்துகளில் கட்டணம் 15 ரூபாயில் இருந்து 10 ரூபாயாக குறைக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கட்டணக் குறைப்பு விழுப்புரம் கோட்டத்தில் உள்ள 700 சொகுசு பேருந்துகளில் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டணக் குறைப்பு நகரப் பேருந்து மற்றும் மாநகர பேருந்துகளில் அனுமதிக்கப்படமாட்டாது.