ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த ரவிச்சந்திரன் 5 ஆம் தேதி மதுரை மத்திய சிறையில் இருந்த சொந்த ஊரான அருப்புக்கோட்டைக்கு பரோலில் சென்றார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருந்த ரவிச்சந்திரன் ,தண்டனை கழிந்துவிட்ட நிலையிலும் சிறையில் உள்ளேன். எனது தாயார் அடிக்கடி நோய்வாய்ப்படுகிறார், சொத்து மற்றும் வேளாண் விவகாரங்களை எனது தாயார் தனியாக கையாள இயலாத நிலையில் உள்ளார். எனவே குடும்பத்தின் சொத்துப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்காக எனக்கு, ஒரு மாதம் நீண்ட கால பரோலில் செல்ல அனுமதி கூறியிருந்தார். இன்னிலையில் சில நிபந்தனையுடன் மார்ச் 5 முதல் 19-ம் தேதி வரை பரோலில் செல்ல உத்தரவிட்டிருந்தனர்.
இதனையெடுத்து மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ரவிசந்திரன், கடந்த 5 ஆம் தேதி மதுரை மத்திய சிறையில் இருந்த சொந்த ஊரான அருப்புக்கோட்டைக்கு சென்றார். வீட்டில் இருக்கும் ரவிசந்திரனை பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் சந்தித்து நலம் விசாரித்தார்கள்.
இந்நிலையில் இன்று ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்புடன் மதுரை வந்த ரவிச்சந்திரன், முதலில் மதுரை யாகப்பா நகரில் உள்ள இடத்தினை பார்வையிட்டார்.பின் காளிகாப்பானில் உள்ள இடத்தினையும் பார்வையிட்டார். இதைதொடர்ந்து மாலை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார்.