தமிழ்நாடு

நியாயவிலைக் கடை ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்

நியாயவிலைக் கடை ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்

Rasus

ஊதிய உயர்வு உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக நியாயவிலைக் கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் நியாயவிலை பணியாளர் சங்கம் சார்பில் இப்போராட்டம் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து அனைத்து மண்டலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து நியாயவிலைக் கடைகளும் தடையின்றி செயல்பட உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. வேலைக்கு வராத பணியாளர்களுக்கு ஊதியம் அளிக்காமல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.