தமிழ்நாடு

தமிழகத்தில் நாளை ரமலான் பண்டிகை - தலைமை காஜி அறிவிப்பு

தமிழகத்தில் நாளை ரமலான் பண்டிகை - தலைமை காஜி அறிவிப்பு

webteam

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ரமலான் பண்டிகை நாளை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் முழுவதும் 30 நாட்களுக்கு நோன்பு கடைபிடிக்கப்படும். இதையடுத்து 30வது நாளில் பிறை தெரிந்ததும் அடுத்த நாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். அந்த வகையில், வானில் முதல் பிறை தெரிந்ததால் சவூதி அரேபியா, கத்தார், குவைத், உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ரமலான் பண்டிகை நாளை கொண்டாடப்படும் என தலைமை காஜி முப்தி முகமது சலாவுதீன் அயூப் தெரிவித்துள்ளார். ரம்ஜான் பண்டிகையையொட்டி சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்‌‌கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழுகைக்கான சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.