தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ரமலான் நோன்பு நாளை முதல் தொடங்குவதாக தலைமை காஜி முப்தி முகமது சலாவுதீன் அயூப் அறிவித்துள்ளார்.
இஸ்லாம் என்பது வெறும் மார்க்கமல்ல - அது வாழ்க்கை முறை என்பது அந்த மதத்தவரின் உறுதியான நம்பிக்கையாகும். அதில், ஐம்பெரும் கடமைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அப்படி இஸ்லாமியர்களின் ஐம்பெரும்கடமைகளில் ஒன்றான ரமலான் நோன்பு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் தொடங்குவதாக தலைமை காஜி முப்தி முகமது சலாவுதீன் அயூப் அறிவித்துள்ளார்.
ரமலான் மாதத்தின் முதல் பிறை காணப்பட்ட மாலைப்பொழுதின் அதிகாலை முதல் ரமலான் நோன்பினை இஸ்லாமியர்கள் கடைபிடிக்கின்றனர்.அதிகாலையில் எழுந்து, சூரியன் உதயத்திற்கு முன் சாப்பிட்டு, பின் மாலை தொழுகை நேரம் வரை சுமார் 12 மணி நேரம் ஒருதுளி நீர் கூட பருகாமல், 30 நாட்கள் நோன்பு இருபது தான் ரமலானின் சிறப்பாகும்.