தமிழ்நாடு

சுருளி; கோவை குற்றால அருவிகளில் குளிக்க தடை

சுருளி; கோவை குற்றால அருவிகளில் குளிக்க தடை

webteam

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பல்வேறு அருவிகளில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தேனி மாவட்டம் சுருளி அருவியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் அமைந்துள்ள சுருளி அருவி சுற்றுலாத்தளங்களில் முக்கியமானது ஆகும்.

இங்கு தமிழகம் மட்டும் இன்றி கேரளா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். மேகமலை, இரவங்கலாறு உள்ளிட்ட வனப்பகுதியில் தொடர் மழையால் கடந்த சில நாட்களாக அருவியில் நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில் நேற்று முதல் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே இரண்டாவது நாளாக அங்கு பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 


 
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடரும் மழையால் கோவையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கோவை குற்றால அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவை மாநகரப் பகுதிகளில் பலத்த காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். மரங்கள் முறிந்து விழும் சூழலும் உருவாகி உள்ளது.