தமிழ்நாடு

“நயன்தாரா பற்றிய பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன்” நடிகர் ராதாரவி

“நயன்தாரா பற்றிய பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன்” நடிகர் ராதாரவி

rajakannan

திமுகவில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட நிலையில், நடிகை நயன்தாரா குறித்து பேசியதற்காக வருத்தம் தெரிவித்து கொள்வதாக நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார். 

நடிகர் ராதாரவி திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக அக்கட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் ராதாரவி திமுக கட்டுப்பாட்டை மீறும் வகையில் செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதனால் திமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

சமீபத்தில் நடந்த திரைப்பட விழா ஒன்றில் பேசிய ராதாரவி, நடிகை ஒருவரை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில், ராதாரவி திமுகவில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நடிகை நயன்தாரா குறித்து பேசியதற்காக வருத்தம் தெரிவித்து கொள்வதாக நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக புதிய தலைமுறைக்கு அவர் அளித்த பேட்டியில், “நான் தவறாக எதுவும் பேசவில்லை. அப்படி பேசியிருந்தால் பத்திரிகையாளர்கள் அப்பொழுதே கண்டனம் தெரிவித்து இருப்பார்கள். நன்றாக பேசினீர்கள் என்றுதான் அவர்கள் பாராட்டினார்கள். நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

நான் பேசியது மனதை பாதித்துள்ளதால் நடிகை நயன் தாரா மற்றும் விக்னேஷ்சிவனிடம் மட்டும் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால் அவர்கள் என்னுடைய கலைத்துறையை சேர்ந்தவர்கள். நான் அவர்கள் வீட்டிற்கு சென்று, அல்லது அவர்கள் என் வீட்டிற்கு வந்து எப்படியானாலும் வருத்தம் தெரிவிக்க நான் தயார். மடியில் கணம் இருந்தால்தானே பயப்பட வேண்டும். என்னால் திமுகவுக்கு பாதிப்பு என்றால் கட்சியில் இருந்து விலகிக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.