செங்குன்றம் நாரவாரிக்குப்பம் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் இருந்து நாளொன்றுக்கு 8.5 டன் அளவிலான குப்பைகள் சேகரிக்கப்பட்டு, புழல் ஏரியின் உபரிநீர் கால்வாய் ஓரத்தில் கொட்டப்படுவதாக கூறப்படுகிறது.
கொட்டப்படும் குப்பைகள் தரம் பிரிக்காத நிலையில், துர்நாற்றம் வீசி வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாவதாகவும், நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து பேசிய பேரூராட்சி செயல் அலுவலர், உயிரி அகழ்வு முறையில் அப்புறப்படுத்த நிதி ஒதுக்கியுள்ளதாகவும், விரைவில் குப்பைகள் அகற்றப்படும் எனவும் தெரிவித்தார்.