தமிழ்நாடு

திடீரென பாய்ந்து கடிக்கும் குரங்கு : அச்சத்தில் ஊரை காலி செய்த மக்கள்

திடீரென பாய்ந்து கடிக்கும் குரங்கு : அச்சத்தில் ஊரை காலி செய்த மக்கள்

webteam

சீர்காழி அருகே இருபதுக்கும் அதிகமானோரை குரங்கு ஒன்று கடித்துக்குதறியதால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை காலி செய்தனர். 

நாகை மாவட்டம் சீர்காழி அருகே தென்னலக்குடி கிராமத்தில் கடந்த ஒருமாதமாக ஒற்றை குரங்கு சுற்றித்திரிகிறது. ‌இந்த குரங்கு‌ அப்பகுதியில் வசிக்கும் சிறுவர்கள், பெரியவர்கள் வரை 20க்கும் அதிகமானோரை கடித்துக்குதறியது.

திடீரென பாய்ந்து வந்து கடிக்கும் இந்தக் குரங்கால் அச்சமடைந்த மக்கள், அதனை பிடிக்குமாறு பலமுறை புகார் வனத்துறையினருக்கு புகார் அளித்துள்ளனர். தொடர் கோரிக்கையையடுத்து குரங்கை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர். 

ஆனால் கூண்டுக்குள் சிக்காமல் குரங்கு சுற்றிவருகிறது. இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி மூதாட்டி ஒருவரை குரங்கு கடித்த நிலையில், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சுயநினைவின்றி இருப்பதாக கூ‌றப்படுகிறது. இதனால் குரங்கை பிடிக்கக்கோரி, வீடுகளை பூட்டிவிட்டு கிராம மக்கள் ஊரை விட்டு வெளியேறி கோவிலில் தஞ்சமடைந்தனர்.