கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு வரும் ஆளுநருக்கு எதிராக, அனைத்து முற்போக்கு அமைப்புகளின் சார்பில் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
நீட் தேர்வு எதிர்ப்பு உட்பட பல்வேறு திட்டங்கள், தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு மனதாக தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் ஆளுநர் அதற்கு எதிராக உள்ளதாக குற்றச்சாட்டு நிலவி வருகிறது.
இந்நிலையில், ‘ஆளுநர் தமிழக நலன் சார்ந்த மசோதாக்களுக்கும் அனுமதி வழங்காமல் உள்ளார். தமிழ்நாடு அரசு கல்வித்துறை அறிவித்திருக்கின்ற மாநில பொது பாடத்திட்டத்தை பல்கலைக்கழகங்கள் ஏற்க வேண்டியது இல்லை’ என்று தெரிவித்து, ஆளுநர் அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி கோவை மருதமலை சாலையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதனிடையில் விமான பயணத்தில் விமானிக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஒன்னறை மணிநேரம் தாமதமாக ஆளுநரின் விமானம் புறப்பட்டது. இதனால் ஆளுநர் கோவை வருவதில் தாமதம் ஏற்பட்டது.