கதிராமங்கலத்தை சேர்ந்த பேராசிரியர் ஜெயராமனுக்கு எதிராக ONGC தொடர்ந்த வழக்கில் ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
பேராசிரியர் ஜெயராமன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி பாரதிதாசன், அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். ஆனால் மற்றொரு வழக்கு நிலுவையில் உள்ளதால் அவரால் சிறையில் இருந்து வெளியே வர முடியாத நிலையில் உள்ளார். கடந்த ஜூன் 30ஆம் தேதி, கதிராமங்கலத்தின் ONGC நிறுவனத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் போராட்டக்காரர்களால் காவல்துறையினர் தாக்கப்பட்ட வழக்கில் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 9 பேரின் ஜாமின் மனுக்கள் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே பேராசிரியர் ஜெயராமன் ஓஎன்ஜிசி தொடர்ந்த வழக்கில் ஜாமின் பெற்றாலும், மற்றொரு வழக்கு நிலுவையில் உள்ளதால் தற்போது சிறையிலிருந்து அவர் வெளியே வரமுடியாது.