தமிழ்நாடு

பேராசிரியர் ஜெயராமனுக்கு இடைக்கால ஜாமின்

பேராசிரியர் ஜெயராமனுக்கு இடைக்கால ஜாமின்

webteam

கதிராமங்கலத்தில் போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஜெயராமனுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன், கதிராமங்கலத்தில் போராட்டம் நடத்தியதால் கடந்த ஜூன் மாதம் 30-ம் தேதி கைது செய்யப்பட்டார். இவரது தந்தை தங்கவேல் நேற்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடல் நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்துள்ள சேந்தங்குடியிலுள்ள ஜெயராமனின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இதையடுத்து பேராசிரியர் ஜெயராமன் இடைக்கால ஜாமின் கோரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துக்கொள்வதற்காக, இடைக்கால ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டதால், அவசர மனுவாக நீதிமன்றம் விசாரணை நடத்தியது. இதையடுத்து தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள, வரும் 26-ம் தேதிவரை இடைக்கால ஜாமின் வழங்கி, நீதிபதி நிஷா பானு இன்று உத்தரவிட்டார்.