தமிழ்நாடு

கோரிக்கைகள் முன்வைப்பு- தமிழகத்தில் இயக்கப்படாத தனியார் பேருந்துகள்..!

கோரிக்கைகள் முன்வைப்பு- தமிழகத்தில் இயக்கப்படாத தனியார் பேருந்துகள்..!

jagadeesh

பேருந்துகளில் 100 சதவிகித இருக்கைகளை நிரப்ப அனுமதியளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழகத்தில் தனியார் பேருந்துகள் இன்று இயக்கப்படவில்லை.

தமிழகத்தில் 4 ஆயிரத்து 600 தனியார் பேருந்துகள் உள்ளன. திருச்சியில் மட்டும் அதிகளவாக 147 தனியார் பேருந்துகள் உள்ளன. கொரோனா பொதுமுடக்க காலத்தில் பேருந்துகள் இயக்கப்படாததால் பெரும் நஷ்டத்தில் இருப்பதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், நேற்று தனியார் பேருந்துகள் உரிமையாளர் சங்கத்தினர் காணொலி காட்சி மூலம் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர்.

அப்போது தனியார் பேருந்துகளில் 100 சதவிகித இருக்கைகளை நிரப்ப அனுமதியளிக்க வேண்டும் என்றும் இந்த காலாண்டிற்கான சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை தமிழக அரசிடம் முன் வைத்தனர். இதற்கு தமிழக அரசு அனுமதியளிக்காத நிலையில், தனியார் பேருந்துகள் இயங்காது என தனியார் பேருந்துகள் உரிமையாளர் சங்க மாநிலச் செயலாளர் தர்மராஜ் தெரிவித்துள்ளார்.