இந்தோனேசியா புதிய தலைமுறை
தமிழ்நாடு

இந்தோனேசியாவின் பப்புவாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு

இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியான பப்புவாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

PT WEB

இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியான பப்புவாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பப்புவா மாகாணத்தின் தலைநகரமான ஜெயபுராவிலிருந்து162 கிலோமீட்டர் தொலைவில் 6 புள்ளி 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து இந்தோனேசியாவின் வானிலை, தட்பவெப்பவியல் மற்றும் புவி இயற்பியல் நிறுவனம், சுனாமி ஆபத்து எதுவும் இல்லை என்றும், ஆனால் நிலநடுக்கம் நிலத்தில் மையம் கொண்டிருப்பதால் பின் அதிர்வுகள் ஏற்படக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது. அதிர்வினை உணர்ந்த மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.