தமிழ்நாடு

முழு ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய இளைஞர்கள் : நூதன முறையில் தண்டனை வழங்கிய போலீசார்

முழு ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய இளைஞர்கள் : நூதன முறையில் தண்டனை வழங்கிய போலீசார்

webteam

பொது முடக்கத்தை மீறி, சென்னை வண்ணாரப்பேட்டையில் சாலையில் சுற்றித்திரிந்த இளைஞர்களுக்கு காவல்துறையினர் நூதனமுறையில் தண்டனை வழங்கினர்.

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. குறிப்பாக பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என அரசு எச்சரித்தும் உள்ளது. ஆனால் இதனை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் பலர் வாகனங்களிலும், வீதிகளிலும் சுற்றி திரிகின்றனர். இதனால் காவல்துறை ஊரடங்கை மீறி வெளியே சுற்றித் திரியும் நபர்கள் மீது வழக்குப்பதிவும், வாகனங்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையும் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் இதனை மீறியும் பொதுமக்கள் வாகனங்களில் சுற்றி வருவதால் முக்கியமாக சாலைகளை மூடியும் தடுத்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் கொரோனா தொற்று பாதித்தவரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் 4 நாட்கள் தொடர்ந்து முழு ஊரடங்கு விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

 இந்த முழு ஊரடங்கை மீறியும் வெளியே சுற்றி திரிபவர்களுக்கு சென்னை போலீசார் தண்டனை வழங்கி வருகின்றனர். அதன்படி சென்னை வண்ணாரப்பேட்டையில் வெளியே சுற்றி திரிந்த 10க்கும் மேற்பட்ட இளைஞர்களை பிடித்து போலீசார் "வெளியே வரமாட்டோம்" என ரிவர்ஸில் நடந்து செல்லும் வட்டமிட்டபடியே ஓடவைத்து தண்டனை வழங்கியுள்ளனர்.