இலவசமாக தக்காளி வழங்கும் காவல்துறை PT Desk
தமிழ்நாடு

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு: சைக்கிளில் வந்தவர்களுக்கு இலவசமாக தக்காளி

தஞ்சாவூரில் சைக்கிள் ஓட்டிவந்த பொதுமக்களுக்கு திடீரென போக்குவரத்து காவல்துறையினர் இலவசமாக தக்காளி வழங்கினர்.

webteam

தனியார் அறக்கட்டளை மற்றும் போக்குவரத்து காவல் துறையினர் இணைந்து சைக்கிளின் பயன்பாட்டை அதிகரிக்கவும், மோட்டார் சைக்கிளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தஞ்சாவூர் மேரிஸ் கார்னர் அருகே கீழ் மேம்பாலம் பகுதியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் எம்ஜி.ராமச்சந்திரன், சைக்கிள் ஓட்டிவந்த 50 பேருக்கு தக்காளியை இலவசமாக வழங்கினார்.

இலவசமாக தக்காளி வழங்கும் காவல்துறை

இதுகுறித்து தனியார் அறக்கட்டளை நிர்வாகி கூறும்போது, “ கடந்த காலங்களில் சைக்கிள் பயன்பாடு இருந்ததால் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லை, உடலும் மனமும் ஆரோக்கியமாக இருந்தது. ஆனால், தற்போது மோட்டார் சைக்கிள் பயன்பாடு அதிக அளவில் இருப்பதால், போக்குவரத்து பாதிப்பு அதிக அளவில் உள்ளது. குறிப்பாக சுற்றுச்சூழல் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது.

எனவே சிறு சிறு வேலைகளுக்கு அனைவரும் சைக்கிளை பயன்படுத்த வேண்டும், மோட்டார் சைக்கிள் பயன்பாட்டை முடிந்தளவு குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சைக்கிள் ஓட்டி வந்தவர்களுக்கு தக்காளி வழங்கப்பட்டது” என்றார்.