தமிழ்நாடு

பள்ளிக்குள் புகுந்த விஷப் பாம்பு - அலறி ஓடிய மாணவர்கள்..!

பள்ளிக்குள் புகுந்த விஷப் பாம்பு - அலறி ஓடிய மாணவர்கள்..!

webteam

தேனி அருகே அரசுப் பள்ளிக்குள் பாம்பு புகுந்ததால், மாணவர்கள் அலறி ஓடினர். 

தேனி அருகிலுள்ள பாலகிருஷ்னாபுரத்தில் அரசு ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் இன்று வழக்கம் போல தொடங்கி நடைபெற்று வர, மாணவர்கள் படித்துள்ளனர். அப்போது பள்ளியின் மையத்தில் திடிரென பாம்பு ஒன்று புகுந்துள்ளது. பாம்பினை கண்டதும் அஞ்சிய மாணவர்கள், அலறி அடித்து ஓடியுள்ளனர். மாணவர்களின் கூச்சலால் அச்சமடைந்த பாம்பு அங்கிருந்த கழிவறைக்குள் புகுந்தது. இதையடுத்து ஆசிரியர்கள் உடனடியாக தேனி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலை அடுத்து விரைத்து வந்த தீயனைப்பு துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி பாம்பினை பிடித்தனர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பிடிபட்ட பாம்பு விஷத்தன்மை கொண்ட கருஞ்சாரை இனத்தை சேர்ந்தது எனத் தெரியவந்தது. பாம்பு பிடித்து செல்லப்பட்ட பிறகு மாணவர்களும், ஆசிரியர்களும் தங்கள் பணியை தொடர்ந்தனர். பிடிபட்ட பாம்பு தேனி அருகில் உள்ள வரல்கரடு பகுதியில் விடப்பட்டது.