கோவையில் தனியார் குடியிருப்பின் கழிவறைக்குள் புகுந்த நல்ல பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டு வனப்பகுதிக்குள் விடப்பட்டது.
கோவை மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் பகுதியில் ‘மே பிளவர்’ குடியிருப்பு வளாகம் உள்ளது. இங்கு ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அக்குடியிருப்பில் உள்ள ‘கிளப் ஹவுஸ்’ கழிவறையை பெண்கள் பயன்படுத்திய போது, அங்கு நாகப் பாம்பு ஒன்று இருப்பது தெரியவந்தது. இதனால் பெண்கள் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்தனர். அத்துடன் அங்கிருந்து அச்சத்தில் ஓடினர்.
இதையடுத்து குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் பாம்பு பிடிக்கும் நபர்களை அழைத்தனர். பாம்பு பிடிப்பவர்கள் வந்து, படமெடுத்தாடிய நாகப் பாம்பை சாதுர்யமாக பிடித்து சென்று வனப்பகுதியில் விட்டனர்.