தமிழ்நாடு

“சாதி, மதத்திற்குள் என்னை அடைக்காதீர்கள்” - மதுரை ஏடிஜிபி வேதனை

“சாதி, மதத்திற்குள் என்னை அடைக்காதீர்கள்” - மதுரை ஏடிஜிபி வேதனை

webteam

தன்னை சாதி, மத அடையாளத்திற்குள் அடைக்க வேண்டாம் என மதுரை மாநகர காவல்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் வேதனை தெரிவித்துள்ளார்.

மதுரை மாநகர காவல் ஆணையரும், ஏடிஜிபி-யுமான டேவிட்சன் தேவாசிர்வாதம் பொறுப்பேற்றதிலிருந்து பொதுமக்கள் - காவல்துறை இடையே நல்வரவை ஏற்படுத்த பல்வேறு சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் அவர் ஒரு குறிப்பிட்ட மதம் மற்றும் சாதிக்கு ஆதரவாகச் செயல்படுவதாக பல்வேறு செய்திகள் மற்றும் கருத்துகள் ஃபேஸ்புக்கில் பகிரப்படுகின்றன. இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள தேவாசிர்வாதம், தன்னை ஒரு சாராருக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறி சாதி, மதத்திற்குள் புகுத்தி அவதூறு பரப்புவது 3ஆம் தரச் செயல்போல உள்ளதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் தொடர்ந்து எந்தவித பாகுபாடின்றி பணிகளைத் தொடரப்போவதாகவும், சட்ட ஒழுங்கை சீர்குலைப்பவர்கள் மீது நடவடிக்கை தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு ஆணையர் பதவியிலிருந்து ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் பதவி உயர்வு பெற்றபோதிலும், மாநகர காவல் ஆணையராகவே பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் இத்தகைய வேதனையை வெளிப்படுத்தியிருப்பது மதுரை காவல்துறை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.