குடிப்பழக்கத்தை மறந்துவிட்டதால் மதுக்கடைகளை திறக்க வேண்டாம் என செங்கல்பட்டை சேர்ந்த குடிநோயாளி ஒருவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
ஏழை எளிய மக்களை கருத்தில் கொண்டு மதுக்கடைகளை திறக்காமல் இருக்க ஆவண செய்ய வேண்டும் என குடிநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. செங்கல்பட்டைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர், மது பழக்கத்திற்கு அடிமையாகி, உடல்நலம் பாதிக்கப்பட்டு, பின்னர் அறுவை சிகிச்சை மூலம் உயிர் பிழைத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், 40 நாட்களாக மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால், மது குடிப்பதையே மறந்திருந்ததாகவும், டாஸ்மாக் திறக்கப்பட்டால் மீண்டும் மது குடிப்பதன் மூலம் தமது உடல்நிலை பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கிற்கு இடையே, நாளை முதல் சென்னை தவிர அனைத்து மாவட்டங்களிலும் மாதுபானக் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.