தமிழ்நாடு

மனைவியின் தாலியை அடகு வைத்து வாடகை கொடுத்த மாற்றுத்திறனாளி

மனைவியின் தாலியை அடகு வைத்து வாடகை கொடுத்த மாற்றுத்திறனாளி

webteam

சென்னையில் வறுமையில் சிக்கிய மாற்றுத்திறனாளி மனைவியின் தாலியை அடகு வைத்த நிகழ்வு காண்போரைக் கலங்கச் செய்துள்ளது.

சென்னை கொளத்தூரைச் சேர்ந்த சுரேஷ் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். காதல் திருமணம் செய்த கையோடு, மனைவி கூலி வேலை பார்த்துக் கொடுத்த பணத்தில் படித்து பட்டம் பெற்றார். பேராசிரியராகப் பணிபுரிந்த குடும்ப வறுமையை விரட்டலாம் என்று சென்னைக்கு வந்த இவருக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.

மாடிப்படிகளில் ஏறிச்சென்று வகுப்பெடுக்க முடியாது என நிராகரிக்கப்பட்ட சுரேஷ், இறுதியில் பொன்னேரியில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராகப் பணியமர்ந்தார். அங்கே படிக்கட்டில் தடுமாறி விழுந்ததால் இவர் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது. இதனால் 4 மாதங்களாக வேலையிழந்து தவித்து வந்தார்.

இந்நிலையில் கொரோனாவால் விதிக்கப்பட்ட பொது முடக்கம் இவரது குடும்பத்தை மேலும் வறுமையில் தள்ளியுள்ளது. சாப்பிடும் உணவிற்குக் கஷ்டம் என்ற நிலைக்கு வந்ததால், திருமண மண்டபங்கள் மூலம் முகூர்த்தப் பானையைச் செய்துகொடுத்து வருகிறார். இருப்பினும் வாடகை கொடுக்க பணம் இல்லாததால், தனது மனைவியின் தாலியை அடகு வைத்து வாடகை கொடுத்துள்ளார். தனக்கு அரசு உதவியின் மூலம் வேலை கிடைத்தால் தனது குடும்பத்திற்கு மிகவும் நன்மையாக இருக்கும் என சுரேஷ் தெரிவித்துள்ளார்.