தமிழ்நாடு

மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை - குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை - குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

webteam

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், பாலமுருகன் என்பவருக்கு மகிளா நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது.

தூத்துக்குடி வடக்கு சோட்டையன் தோப்பு பகுதியில் வசித்து வரும் முத்தையா என்பவரின் மகன் பாலமுருகன் (25). அதேதெருவில் இவரின் தூரத்து உறவு முறையான (அண்ணன் தங்கை) காது கேளாத, வாய் பேசமுடியாத பெண் வசித்து வருகிறார். அந்தப் பெண் பாலமுருகன் வீட்டின் முன்பாக உள்ள குடிநீர் குழாய்க்கு தண்ணீர் எடுக்க வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். கடந்த 2015ஆம் ஆண்டு தண்ணீர் எடுக்க வந்த அப்பெண்ணை, வீட்டிலிருந்த பாலமுருகன் தனது வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக இழுத்து சென்றிருக்கிறார். பின்னர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் ஆய்வாளர் மரியரோஸ்லின் வழக்கு பதிந்து பாலமுருகனை கைது செய்தார். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி குமார் சரவணன், குற்றவாளி பாலமுருகனுக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதத்தை கட்டத் தவறினால் 6 மாத தண்டனையும் விதித்து ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.