தமிழ்நாடு

ஆங்கிலப் புத்தாண்டில் இந்து கோயில்களை திறக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி

ஆங்கிலப் புத்தாண்டில் இந்து கோயில்களை திறக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி

Rasus

ஆங்கிலப் புத்தாண்டு நாளில் இந்து கோயில்களை நள்ளிரவில் திறக்க தடைகோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

அஸ்வத்தாமன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், ஆகம விதிகளில் இந்துக் கோயில்கள் இரவு 9 மணிக்கு நடை சாத்தப்பட்டு, காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் திறக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. சைவ, வைணவ கோயில்களில் மகா சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி நாட்களில் நள்ளிரவில் இந்து கோயில்கள் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். 

ஆனால், ஆகம விதிகளுக்கு முரணாக ஆங்கிலப் புத்தாண்டு உள்ளிட்ட மேற்கத்திய புத்தாண்டுகளில் இந்து கோயில்கள் திறக்கக்கூடாது என ஆந்திர அரசு 2017-ல் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. அதேபோல தமிழகத்திலும் ஆங்கிலப் புத்தாண்டு தினங்களில் நள்ளிரவில் திறக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது,  இதுபோன்ற வழக்கை உயர் நீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்துள்ளதை சுட்டிக்காட்டியும், ஆந்திர மாநில உத்தரவு தமிழக அரசுக்கு பொறுந்தாது எனத் தெளிவுபடுத்தியும் அஸ்வத்தாமன் மனுவை தள்ளுபடி செய்து உத்தவிட்டனர்.