தமிழ்நாடு

பெரியார் சிலை உடைப்புக்கு முதலமைச்சர் விளக்கம்

பெரியார் சிலை உடைப்புக்கு முதலமைச்சர் விளக்கம்

webteam

பெரியார் சிலையை உடைத்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிலை உடைப்பில் ஈடுபட்டவர் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரம் முடிவடைந்தவுடன், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பெரியார் சிலை உடைப்பு விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர் பெரியார் சிலை உடைக்கப்படும் என பதிவிட்ட ஹெச் ராஜா மீது நடவடிக்கை எடுக்கப்படாததே இத்தகைய சிலை உடைப்பிற்கு காரணம் என்றும் குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதுக்கோட்டை ஆலங்குடியில் பெரியார் சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தில் 12 மணிநேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் சிலையை சேதப்படுத்தியவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்ட முதலமைச்சர் இரு நிகழ்வுகளும் கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டார். சிலையை உடைத்தவர்கள் யாராக இருந்தாலும், பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் உறுதி அளித்தார்.