பெரம்பலூர் மக்களவை உறுப்பினர் பாரிவேந்தர், தனது சொந்த செலவில் 17 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆம்புலன்ஸ் மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டிகளை அந்த மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.
பெரம்பலூர் மாவட்டத்தில், கொரோனா முதல் அலையின்போது பாரிவேந்தர் எம்.பி சார்பில் 60 டன் அரிசி மற்றும் காய்கறிகள் தொகுதி மக்களுக்கு வழங்கப்பட்டது. இரண்டாம் அலை பரவல் தொடங்கியபோது, பாரிவேந்தர் 60 படுக்கை வசதிகளை செய்து கொடுத்துள்ளார்.
இந்நிலையில் அவர் தனது சொந்த செலவில் 17 லட்ச ரூபாய் மதிப்பிலான நவீன ஆம்புலன்ஸ் வாகனத்தை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட ப்ரியாவிடம், ஒப்படைத்தார். மேலும் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 3 ஆக்சிஜன் செறிவூட்டிகளையும் இலவசமாக வழங்கினார்.