தமிழ்நாடு

மதவாத பாஜகவுக்கு துணைபோகும் அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் - துரை வைகோ

மதவாத பாஜகவுக்கு துணைபோகும் அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் - துரை வைகோ

webteam

70 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றி விட்டது. நிறைவேற்றவில்லை என எதிர்கட்சிகள் பொய் பரப்புரை செய்து வருகிறார்கள் என மதிமுக தலைமை கழக செயலாளார் துரை வைகோ தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இன்று காலை ஈரோடு பேருந்து நிலையம் சத்தி ரோடு, பார்க் சாலை , கருங்கல்பாளையம், மணிக்கூண்டு, பன்னீர் செல்வம் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் சாலை வழியாக நடந்து சென்று வாக்குகளை சேகரித்தார்.

முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 70 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றி விட்டது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சிகள் பொய் பரப்புரை செய்கின்றனர். தமிழகத்தில் மதவாதத்தை தூண்டும் பாஜக, அதற்கு துணை போகும் அதிமுகவிற்கும் இடைத்தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.

இடைத்தேர்தல் நேரத்தில் விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக தெரிவித்து, கூட்டணி கட்சிகளுக்குள் பாஜக குழப்பத்தை விளைவிக்கின்றதோ என்ற சந்தேகம் ஏற்படுவதாக தெரிவித்தார்.