தமிழ்நாடு

வீடுகளில் விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடி மகிழும் மக்கள்

வீடுகளில் விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடி மகிழும் மக்கள்

Sinekadhara

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தமிழகத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடவோ, ஊர்வலம் செல்லவோ தடை விதிக்கப்பட்டிருந்தாலும், வீடுகளில் வழக்கமான உற்சாகத்துடனேயே மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

வீடுகளில் வைத்து வழிபடுவதற்காக சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை ஏராளமானோர் வாங்கிச்சென்றனர். விநாயகருக்கு படையல் வைக்கும் உணவுப்பொருட்கள் தயாரிப்பதற்கு தேவையானவற்றை வாங்குவதற்கு சந்தைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. அருகம்புல், எருக்கம் பூக்கள் என, விநாயகருக்கு உகந்தவையாகக் கருதப்படும் பொருட்களுக்கு சந்தைகளில் வழக்கமான வரவேற்பு காணப்பட்டது.

பொது இடங்களில் கூட்டு வழிபாடுகள் நடைபெறாவிட்டாலும், வழக்கமான உற்சாகத்துடன் மக்களும், வழக்கமான திருவிழாக்கோலத்துடன் தமிழகமும் காணப்படுகிறது.