தமிழ்நாடு

மணல் திருட்டு மாட்டுவண்டிகள்: தடுத்து நிறுத்தி ஓட்டிச்சென்ற காவலர்கள்.!

மணல் திருட்டு மாட்டுவண்டிகள்: தடுத்து நிறுத்தி ஓட்டிச்சென்ற காவலர்கள்.!

webteam


மணல் திருடிய மாட்டுவண்டிகளை உரிமையாளர்கள் எடுக்க மறுத்ததால், காவலர்களே மாட்டு வண்டிகளை ஓட்டிச் சென்றது கவனத்தை ஈர்த்துள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த எருமனூர் பகுதியில், மாரி ஓடையில் இருந்து மணல் கடத்தப்படுவதாக விருத்தாசலம்  காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல்துறையினர் நிகழ்விடத்திற்குச் சென்று ஆய்வு நடத்தினர்.

அப்போது 6 மாட்டு வண்டிகளில் சிலர் மணல் எடுத்து வந்துகொண்டிருந்தனர். அவர்களிடம் காவலர்கள் விசாரணை நடத்திய போது, சொந்தத்தேவைக்காக மணல் எடுத்து வருவதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை காவல்துறையினர் சமாதானம் செய்த நிலையில், மணல் எடுத்து வந்த நபர்கள் மாட்டு வண்டிகளை எடுக்க மறுத்தனர். இதனையடுத்து காவலர்களே மாட்டு வண்டிகளை ஓட்டிச் சென்றனர்.