தமிழ்நாடு

லண்டனில் உள்ள பென்னிகுவிக் கல்லறை சேதம் : ஓபிஎஸ் கண்டனம்

லண்டனில் உள்ள பென்னிகுவிக் கல்லறை சேதம் : ஓபிஎஸ் கண்டனம்

webteam

தமிழர்கள் என்றும் நன்றியோடு நினைவுகூர்ந்து போற்றும் ஜான் பென்னிகுவிக் என தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், “தன்னலமின்றி தனது குடும்பச் சொத்துகளை விற்று முல்லைப் பெரியாறு அணைகட்டி தேனி மாவட்டம் உட்பட தென்தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியவர் ஜான் பென்னிகுவிக். தமிழர்கள் என்றும் நன்றியோடு நினைவுகூர்ந்து போற்றும் ஜான் பென்னிகுவிக்கின் கல்லறையை லண்டனில் மர்மநபர்கள் சேதப்படுத்தியுள்ள செயலை வன்மையாக கண்டிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பென்னிகுவிக் கடந்த 11.3.1913-ம் தேதி அவரது சொந்த ஊரான லண்டனில் உயிரிழந்தார். அவருக்கு லண்டன் செயின்ட் பீட்டர்ஸ் பர்க் தேவாலயத்தில் கல்லறை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கல்லறையை லண்டன் வாழ் தமிழ் மக்கள் அடிக்கடி பார்வையிட்டு அதன் முன்பு நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இந்த கல்லறையின் மீது அமைக்கப்பட்டு இருந்த சிலுவை வடிவிலான பாறை இடித்து அகற்றப்பட்டு இருந்தது. கல்லறையை சேதப்படுத்தியவர்களை லண்டன் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.