தமிழ்நாடு

ஒரே கோரிக்கையை வலியுறுத்திய ஓபிஎஸ், ஸ்டாலின்

ஒரே கோரிக்கையை வலியுறுத்திய ஓபிஎஸ், ஸ்டாலின்

webteam

ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற ஒரே கோரிக்கையை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஸ்டாலின் ஆகியோர் பேரவையில் வலியுறுத்தினர்.

எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தொடர் இன்று கூடியது. இதில், ஓபிஎஸ் ஆதரவு அணியினர் மற்றும் திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் ரகசிய வாக்கெடுப்பினை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். கோரிக்கையை வலியுறுத்தி பேசிய ஸ்டாலின், ரகசிய வாக்கெடுப்பு மட்டுமே உண்மையான ஜனநாயகத்துக்கு வழிவகுக்கும். பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் அளித்துள்ள நிலையில், எதற்காக அவசரப்பட வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார். ஆளுநர் அளித்த அவகாசத்தின்படிதான் இன்றைய சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது என்று சபாநாயகர் அதற்கு பதிலளித்தார். நம்பிக்கை வாக்கெடுப்பினை வேறொரு நாளில் நடத்த வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். இந்தக் கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்தார். இதையடுத்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். சட்டமன்ற உறுப்பினர்கள், தங்கள் தொகுதிக்குச் சென்று வந்த பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். மக்கள் குரலை எம்எல்ஏக்கள் சபையில் ஒலிக்க வேண்டும் எனவும் பன்னீர் செல்வம் கூறினார். எப்படி வாக்கெடுப்பு நடத்துவது என்பது சபாநாயகரின் உரிமை என தனபால் கூறினார்.