தமிழ்நாடு

மீத்தேன் எடுக்கவில்லை.. எண்ணெய் எடுக்கும் பணிகள் தொடரும்: ஓ.என்.ஜி.சி

மீத்தேன் எடுக்கவில்லை.. எண்ணெய் எடுக்கும் பணிகள் தொடரும்: ஓ.என்.ஜி.சி

webteam

மீத்தேன் எடுக்கும் பணியில் ஈடுபடவில்லை என்றும், கதிராமங்கலத்தில் எண்ணெய் எடுக்கும் பணிகள் தொடரும் என்றும் ஓ.என்.ஜி.சி தெரிவித்துள்ளது.

மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கும் வகையில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் செயல்படும் என்று அந்நிறுவனத்தின் தலைமை மேலாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் ஓ.என்.ஜி.சி‌ நிறுவனத்தின் செயல்பாடுகளால் நிலத்தடி நீர்மட்டம் மாசடையவும் இல்லை, குறையவும் இல்லை என்பது ஆய்வுபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார். எண்ணெய் கசிவு ஏற்பட்ட கதிராமங்கலத்தில் ஆய்வு செய்யப்பட்டு ஆவன செய்யப்படும் என்றும் ஓ.என்.ஜி.சி தெரிவித்துள்ளது. இது போன்ற பிரச்னைகள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.